தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஜோதிகா.
இவர் நடிப்பில் கடைசியாக உடன்பிறப்பே என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது.
நேரடியாக ஒடிடி-யில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டியுடன் காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகை ஜோதிகாவின் பாலிவுட் ரீ-எண்ட்ரி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி இந்தியில் ஒரு படம் உருவாகவுள்ளதாகவும், அதில் ஜோதிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஸ்ரீகாந்த் பொல்லாவாக நடிகர் ராஜ்குமார் ராவ் நடிப்பதாகவும், அவருடன் ஜோதிகா மற்றும் ஆல்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
கடைசியாக இந்தியில் ஜோதிகா டோலி சஜா கே ரக்கீனா, லிட்டில் ஜான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு 21 ஆண்டுகளுக்கு பின் இந்தியில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
Post a Comment