கல்கி அறக்கட்டளைக்கு பொன்னியின் செல்வன் திரைப்பட குழுவினர் 1 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளனர்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கினர்.
இந்த படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. இதைத்தொடர்ந்து அமரர் கல்கி குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்திருந்தது.
இது குறித்து சமூக வலைதளங்களிலும் சிலர் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பாளர்களான லைகா மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, அமரர் கல்கி அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளனர்.
அந்த காசோலையை கல்கியின் மகனிடம் நேற்று பொன்னியின் செல்வன் பட குழுவினர் ஒப்படைத்தனர்.
Post a Comment