தனுஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ்.
இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் அவர் நடித்திருந்த தி கிரே மேன் திரைப்படம் பெரியளவில் பேசப்பட்டது.
மேலும் இவர் நடிப்பில் அடுத்தடுத்து வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட சில முக்கிய திரைப்படங்களும் வெளியாக இருக்கின்றன.
இந்நிலையில் நடிகர் தனுஷ் கட்டி வரும் பிரம்மாண்ட வீட்டு குறித்த சில முக்கிய தகவல் தெரிய வந்துள்ளன.
ஆடம்பரமான வீடு
- சென்னை முக்கிய நகரமான போயஸ் கார்டன்-ல் தான் அந்த வீட்டு கட்டப்பட்டு வருகிறது. அந்த வீட்டின் 90% வேலைகள் முடிந்துவிட்டதாம்
- மேலும் இந்த வீட்டின் மதிப்பு மட்டும் ரூ. 150 கோடி அல்லது அதற்கு மேலும் செல்ல வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
- சமீபத்தில் தான் அந்த வீட்டில் நடிகர் தனுஷின் அப்பா-அம்மாவிற்கு 70-வது பிறந்தநாள் பூஜை நடைப்பெற்றுள்ளது.
- நடிகர் ரஜினிகாந்த் வசிக்கும் வீட்டிற்கு மிக அருகில் தான் தனுஷ் கட்டிவரும் புதிய வீடும் அமைந்துள்ளது.
- மேலும் அந்த வீட்டின் பரப்பளவு மட்டும் 90,000 sq.ft இருக்குமாம்.
Post a Comment