கடமையை செய் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்து, யாஷிகா ஆனந்த் எஸ்.ஜே.சூர்யா அவர்களின் மனைவியாகவும், மொட்டை ராஜேந்திரன் திருடன் ஆகவும், வின்சென்ட் அசோகன், சார்லஸ் வினோத் ஆகவும், நடித்து இருக்கிறார்கள். நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி யுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தான் வெங்கட் ராகவன். இவரது இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்த முத்தின கத்திரிக்காய் படம் சுந்தர்.சி ஹீரோவாக வைத்து எடுத்து இருந்தார். இவரின் அடுத்த படம் தான் கடமையைச் செய் இந்த படம் பார்த்த ரசிகர்கள் வித்தியாசமான கதை களத்துடன் படம் இருப்பதாகவும் எஸ்.ஜே.சூர்யா வின் நடிப்பு வழக்கம் போல் பிரமாதமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
எஸ்.ஜே.சூர்யா :- எஸ் ஜே சூர்யா சினிமா துறைக்குள் இயக்குனராக வந்து அதன்பின் இசையமைப்பாளராகவும் தன் திறமைகளை வெளிக்காட்டிக் கொண்டிருந்தவர். பின்பு பல படங்களிலும் நடிக்க ஆரம்பித்து பின்பு ஆரம்பத்தில் ஹீரோவாக படம் நடித்துக் கொண்டிருந்த எஸ்.ஜே.சூர்யா பின்பு ஸ்பைடர், மெர்சல் போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பின்பு சிம்புவின் நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். எஸ்.ஜே.சூர்யா சிம்புவை விட பிரமாதமாக நடித்துள்ளார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீஸாகி சக்கை போடு போட்டு வசூல் வேட்டை நடத்திய டான் திரைபடத்திலும் தனது நவரச நடிப்பை கொடுத்திருந்தார். டான் திரைப்படத்தின் மூலம் எஸ்.ஜே.சூர்யாவின் ரசிகர் பட்டாளம் மேலும் விரிவடைந்த நிலையில் இன்று எஸ்.ஜே.சூர்யாவின் கடமையை செய் திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
கடமையை செய் :- கடமையைச் செய் படத்தில் சிவில் இன்ஜினியர் கதாபாத்திரத்தில் வரும் எஸ்.ஜே.சூர்யா தனது மனைவி யாஷிகா ஆனந்த மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார். மற்றும் சிவில் இன்ஜினியர் கதாபாத்திரத்தில் வரும் எஸ்.ஜே.சூர்யா ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து வரும் நிலையில் இருப்பதை கண்டுபிடிக்கிறார். இந்த விஷயத்தை தெரிந்து கொண்டு எஸ்.ஜே.சூர்யா யாரிடமும் உண்மையை சொல்லக்கூடாது என்பதற்காக அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் உரிமையாளராக இருப்பவர். எஸ்.ஜே.சூர்யாவை விபத்துக்கு உள்ளாக்கி கொல்ல முற்படுகிறார். அந்த விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கும் எஸ்.ஜே.சூர்யா ஒரு வித்தியாசமான கோமா நிலைக்கு செல்கிறார்.
இரண்டாம் பாகம் :- படத்தின் இரண்டாம் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா இந்த கோமா நிலையில் அவரின் நடிப்புகள் பாராட்டும் வண்ணமே உள்ளது. இந்நிலையில் விபத்துக்கு உள்ளான எஸ்.ஜே.சூர்யா கோமா இந்நிலையில் இருந்து அங்கு என்னென்ன நடக்கிறது என்பதை கவனிக்கவும், பார்க்கவும் இயலும் ஆனால் அவரால் சாதாரணமாக எழுந்து நடக்கவும், கை கால்களை பெரிதாக அசைக்கவும, வாய் பேசவும் முடியாது.
இந்த நிலையில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யா கட்டிடத்தின் உண்மையை பற்றி தன் மனைவி யாஷிகா ஆனந்த் மூலமாக வெளி கொண்டு வருகிறார் எப்படி அனைவரையும் காப்பாற்றுகிறார் என்று வருகிறார் வித்தியாசமான கதைகளுடன் இருக்கிறது. மொட்டை ராஜேந்திரனின் நகைச்சுவை காட்சிகள் நமக்கு அங்கங்கு குபீர் சிரிப்புகளை வர வைத்தாலும் பெரும்பாலான இடங்களில் காமெடி சீன்கள் அந்தளவு எடுபடவில்லை.
எடிட்ங்கில் கோட்டை விட்டனர் :- வில்லனாக வருபவரின் நடிப்பும் பெரிதாக சொல்லும் படி இல்லை. வில்லனின் தம்பியாக வருபவர் அவரின் வில்லத்தனமான நடிப்பில் பின்னி எடுத்துள்ளார் மேலும் வில்லத்தனமான பேசும் வசனம் ” கடவுள் செடி, கொடிகள், விலங்குகள் போன்றவற்றில் சிலதுகளுக்கு விஷத்தன்மை வாய்ந்ததாக வைத்திருப்பது போன்று மனிதர்களுக்கும் சில மனிதர்களுக்குள் விஷத்தன்மை வாய்ந்த மனிதர்களாக படைத்திருக்கிறார் அது நான் தான் ” என்று விஷத்தன்மையுடன் அவர் பேசும் வசனங்கள் அனைத்தும் பாராட்டுக் உரியது. யாஷிகா ஆனந்த் அங்கங்கே கவர்ச்சியாக நடித்திருந்தாலும் எப்பொழுதும் போல் இல்லாமல் இந்த படத்தில் நன்றாகவே நடித்துள்ளார். படத்தின் கதைக்களம் நன்றாக இருந்தாலும் டெக்னிக்கலாக அங்கங்கே குறைகள் இருக்கிறது அதுமட்டுமில்லாமல் எடிட்ங்கில் சிஜே வேலை பாடுகள் மனம் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை எனவும் படம் பார்த்தவர்கள் தங்கள் விமர்சனங்களை முன் வைக்கின்றனர்
Post a Comment