மதுர வீரன் அழகுல' பாடலில் ராஜலட்சுமிக்கு பதிலாக அதிதி
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் 'விருமன்'. அதிதி சங்கர், சூரி, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அண்மையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் நடைப்பெற்றது. இதில் பாடலாசியர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என தனது வேதனையை சினேகன் தெரிவித்திருந்தார். இதன்பின்னர் படக்குழுவின் பிரஸ்மீட்டுக்கு பாடலாசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர்.
இந்நிலையில், யுவன் - அதிதி குரலில் இப்படத்தின் இரண்டாம் பாடலாக வெளியாகியுயுள்ள 'மதுர வீரன் அழகுல' பாடலை முதலில் பாடகி ராஜலட்சுமி பாடினார். ஆனால், அதிதி குரலில் பாடல் வெளியாகியுள்ளது. சங்கரின் மகள் என்பதால் ராஜலட்சுமியை நீக்கிவிட்டு அதிதியைப் பாடவைத்துவிட்டார்கள் என்று விமர்சனம் எழுந்த நிலையில், ராஜலட்சுமி அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
"எனக்கு இதில் எந்த வருத்தமும் கிடையாது. அதிதி நன்றாகவே அந்தப் பாடலை பாடியுள்ளார். எனது குரல் செட் ஆகாமல் இருந்திருக்கலாம். அதற்காக கூட அதிதியை மாற்றியிருக்கலாம். ஆடியோ வெளியீட்டு விழாவில் அதிதி பாடியது நன்றாக இருந்தது. சரியானவர்களுக்கு தான் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள் என்பதில் சந்தோசமே" என்று ராஜலட்சுமி பேசியுள்ளார்.
Post a Comment