அஜித்தின் சாகச வீடியோவை பதிவிட்ட AK62 பட இயக்குநர்! இவ்வளவு திவீரமான ரசிகராக உள்ளாரே
நடிகர் அஜித் தற்போது இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61-ல் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் செம வைரலாகின.
இப்படத்தை தொடர்ந்து அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK62 படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் விக்னேஷ் சிவன் அவ்வப்போது நயன்தாராவின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருவதை பார்த்து வருகிறோம்.
மேலும் தற்போது அவரின் டிவிட்டர் பக்கத்தில் நடிகர் அஜித் திரைப்படத்திற்காக சில சாகச காட்சிகள் குறித்து வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். மேலும் அந்த பதிவில் தனிப்பட்ட நபரின் அர்பணிப்பு மொத்த குழுவின் வெற்றி என்பதை விவரித்துள்ளார்.
இதேபோல் அஜித் குறித்த பதிவுகளை விக்னேஷ் சிவன் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது ரசிகர்கள் AK62 பெரிய Fanboy சம்பவமாக இருக்கப்போகிறது என சொல்லி வருகின்றனர்.
https://twitter.com/VigneshShivN
Post a Comment