5 கட்சி அமாவாசை.. மதுரை சரவணனை விமர்சித்த எச் ராஜா.. டாக்டர் முதலில் இருந்த கட்சி எது தெரியுமா?
பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட மதுரை சரவணனை 5 கட்சி அமாவாசை என பாஜக நிர்வாகி எச் ராஜா விமர்சித்துள்ளார்.
பிடிஆர் மன்னிப்பு
இந்த நிலையில் நேற்று மதியம் வரை பிடிஆர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என கோபமாக கொ்நதளித்த மதுரை டாக்டர் சரவணன் திடீரென நள்ளிரவில் அமைச்சர் பிடிஆர் வீட்டுக்கு சென்று செருப்பு வீச்சு சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார். மேலும் பாஜகவில் மத அரசியலும் வெறுப்பு அரசியலும் இருப்பதாக சரவணன் கடுமையாக விமர்சித்திருந்தார்.
திமுகவில் இணைய போகிறீர்களா
மேலும் அவரிடம் நீங்கள் திமுகவில் இணைய போகிறீர்களா என கேட்டதற்கு திமுகவில் நான் ஏன் இணையக் கூடாது, என் தாய் வீடுதானே அது. அங்கு நான் 10, 15 ஆண்டுகளாக இருந்தேனே என கூறியிருந்தார். இன்று காலை பாஜகவிலிருந்து விலகல் கடிதத்தை கொடுப்பதாக இருந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அவரை நீக்கிவிட்டார்.
மதுரை சரவணன்
மதுரை சரவணன் விரைவில் திமுகவுக்கு திரும்புவார் என சொல்லப்பட்ட நிலையில் எச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் 5 கட்சி அமாவாசை என சரவணனை கடுமையாக விமர்சித்துள்ளார். பெயரை குறிப்பிடாமலேயே எச் ராஜா விமர்சனம் செய்துள்ளார். அப்படி எச் ராஜா சொல்வது போல் சரவணன் 5 கட்சிகளில் மாறியுள்ளாரா என்பதை பார்ப்போம்.
மதுரை நரிமேட்டில் மருத்துவமனை
மதுரை நரிமேட்டில் சரவணா மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவமனை வைத்து இவர் ஏழை மக்களுக்கு இலவசமாக வைத்தியம் செய்து வருகிறார். இதன் காரணமாக மதுரையில் சரவணனுக்கு செல்வாக்கு கூடியது. இதையடுத்து மதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். மதிமுகவில் இருந்து கொண்டே சினிமாவிலும் நடித்துக் கொண்டிருந்தார்.
மதிமுகவில் பதவி
மதிமுக மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியையும் அவர் பெற்றார். எனினும் இரு ஆண்டுகள் மட்டுமே மதிமுகவில் இருந்த சரவணன் விலகி பாஜகவில் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இணைந்தார். பின்னர் சில நாட்களிலேயே மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சரவணன் திமுகவில் இணைந்தார். திருப்பரங்குன்றம் சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிட்ட சரவணன் தோல்வி அடைந்தார்.
மருத்துவமனை
இதையடுத்து அப்போது மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிரு்நதார். அப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சரவணன், ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை. எனவே ஜெயலலிதா இரட்டை இலை சின்னம் தொடர்பாக கைரேகை பதிவு செல்லாது என புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
பாஜகவில் இருந்து விலகிவிட்டேன் - மதுரை சரவணன்
5 கட்சியா? இதையடுத்து திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் 2019 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட சரவணன் வெற்றி பெற்றார். அவர் அந்த தொகுதியின் எம்எல்ஏவாக 2021 ஆம் ஆண்டு வரை நீடித்தார். பின்னர் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தனக்கு திருப்பரங்குன்றத்தில் வாய்ப்பு கிடைக்கும் என கருதினார். ஆனால் அந்த தொகுதி கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த சரவணன் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து பாஜக சார்பில் போட்டியிட சரவணனுக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் அவர் தோல்வி அடைந்தார். இதையடுத்து மதுரை மாவட்ட பாஜக தலைவராக இருந்து வந்தார். தற்போது பாஜகவிலிருந்தும் அவர் விலகுவதாக அறிவித்துள்ளார். மதிமுக, பாஜக, திமுக, மீண்டும் பாஜகவுக்கு சென்று தற்போது அங்கிருந்து விலகி திமுகவுக்கே செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Post a Comment