BREAKING: பிரபல 5 ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு விழா.. திரளும் தமிழ் திரையுலகம்!
உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு விழா சென்னையில் உள்ள பிரபல 5 ஸ்டார் ஹோட்டலில் நடக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன
உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதற்கு முன் ரெட் ஜெயன்ட் மூவிஸ் எனும் நிறுவனம் சார்பில் படங்களை தயாரித்தும் வினியோகம் செய்தும் வந்தார்.
குருவி, மன்மதன் அன்பு, ஆதவன், ஏழாம் அறிவு, நீர்பறவை, மனிதன் போன்ற படங்களும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட படங்களாகும்.
தற்போது தீவிர அரசியலில் குதித்து சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வுச் செய்யப்பட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து 15 வருடங்கள் ஆவதையொட்டி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் சென்னையில் உள்ள பிரபல லீலா பேலஸ் ஹோட்டலில் வரும் திங்கட்கிழமை மிகப் பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வில் சமீபத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் வினியோகம் செய்யப்பட்ட 7 தமிழ் படங்களின் நடிகர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விக்ரம், ராக்கெட்ரி, FIR, குலு குலு, காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் வினியோகம் செய்யப்பட்டவை.
தற்போது உதயநிதி ஸ்டாலின் மகிழ் திருமேனி இயக்கத்தில் கழகத் தலைவன், மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படங்களின் நடித்து வருகிறார்.
Post a Comment