இந்தியாவின் கேரள மாநிலத்தில், முகமது பாவா என்பவருக்குத் தம்முடைய வீட்டை விற்கச் செல்லும் சில மணி நேரங்களுக்கு முன் அடித்தது அதிர்ஷ்டம்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில், முகமது பாவா என்பவருக்குத் தம்முடைய வீட்டை விற்கச் செல்லும் சில மணி நேரங்களுக்கு முன் அடித்தது அதிர்ஷ்டம்.
லாட்டரிச் சீட்டு அதிர்ஷ்டக் குலுக்கில், அவர் சுமார் 125-ஆயிரம் டாலர் (1 கோடி ரூபாய்) வென்றுள்ளதாக நண்பர் மூலம் தகவல் கிடைத்தது.
கடந்த திங்கள்கிழமை (25 ஜூலை) பிற்பகல் 3.20 மணியளவில், திரு. பாவாவிற்கு ஒரு சிறப்பான நேரத்தில் இந்தத் தகவல் கிடைத்தது.
கடுமையான கடன் சுமையில் இருந்த பாவா, தம்முடைய சொந்த வீட்டை விற்றுக் கடனை அடைக்க முயற்சி செய்தார்.
அதிர்ஷ்டக் குலுக்கில் வெற்றி பெற்ற செய்தி கிடைத்த அன்று, மாலை 5.30 மணிக்கு வீட்டை வாங்குபவரிடமிருந்து அவர் முன்பணம் பெற இருந்தார்.
அவரது அதிர்ஷ்டம்...
சுமார் 2 மணி நேரத்திற்கு முன்னர் குலுக்கலில் வெற்றி பெற்ற தகவல் அவரைத் தேடி வந்தது.
தகவலைக் கேட்டுப் பெரும் நிம்மதியடைந்ததாகத் திரு. பாவா, BBCயிடம் கூறினார்.
தமது உணர்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்றும், பரவசத்தின் உச்சிக்கே சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வருமான வரி போக, பாவாவிற்குச் சுமார் 63 லட்ச ரூபாய் கிடைக்கும்.
லாட்டரியில் வெற்றி பெற்ற செய்தி தெரிந்தவுடன், கடனாளிகள் தம்மைத் தொந்தரவு செய்வதை நிறுத்திவிட்டதாகக் கூறுகிறார் பாவா.
கடனை அடைத்த பிறகு மீதமுள்ள தொகையை நல்ல முறையில் பயன்படுத்தப் போவதாகவும், ஏழைகளுக்கு சிறிது பணத்தை நன்கொடையாக வழங்கவும் விரும்புவதாகக் குதூகலத்துடன் கூறினார் பாவா.
Post a Comment