பல கோடி நஷ்டம், மனமுடைந்து போன தயாரிப்பாளர்.. விஜய்யை மலைபோல் நம்பும் கூட்டம்
ஏற்கனவே விஜய்க்கு தெலுங்கு திரையுலகில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த திரைப்படம் விஜய்யின் நேரடி தெலுங்கு திரைப்படமாக வெளியாக இருப்பதால் அங்கு இந்த படம் குறித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தற்போது விஜய்யை தான் மலை போல் நம்பி இருக்கிறாராம். ஏனென்றால் அவர் தயாரிப்பில் வெளிவந்த கடந்த சில திரைப்படங்கள் அனைத்தும் கடும் தோல்வி அடைந்தது. தெலுங்கில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் இவர் பாலிவுட்டிலும் சில திரைப்படங்களை தயாரித்திருந்தார்.
ஆனால் அந்தத் திரைப்படங்கள் இவருக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால் துவண்டு போன தில் ராஜு தற்போது விஜய்யின் வாரிசு திரைப்படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். வழக்கமாக விஜய்யின் திரைப்படங்கள் கலெக்ஷனில் மாஸ் காட்டும்.
அதை நன்றாக தெரிந்துகொண்ட தில் ராஜு இந்த படத்தின் மூலம் அனைத்து நஷ்டத்தையும் சரிகட்டும் எண்ணத்தில் இருக்கிறார். மேலும் அவர் இயக்குனர் சங்கர், ராம்சரணை வைத்து இயக்கும் திரைப்படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
இதை வைத்து பார்க்கும் போது தில் ராஜு தெலுங்கு பிரபலங்களை நம்பாமல் தமிழ் பிரபலங்களை மட்டுமே நம்பி களத்தில் இறங்கி இருப்பது நன்றாக தெரிகிறது. இதுவே தமிழ் சினிமா எந்த அளவுக்கு புகழ் பெற்றிருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது. இவரைப் போன்றே இன்னும் சில தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்களும் தமிழ் நடிகர்களை வைத்து படம் எடுக்க ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment