வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி போராட திட்டம் - கடலூரில் மூவர் கைது
கள்ளக்குறிச்சிமாவட்டம் சின்ன சேலம பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 13-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக மாணவர் அமைப்பினர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அந்த போராட்டம் கலவரமாக மாறியது. கலவரத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு கடலூர் வெள்ளி கடற்கரையில் ஒன்றிணைவோம் என வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்ட முற்போக்கு அமைப்பை சேர்ந்த சேர்ந்த விஜய் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். மேலும் கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக கடலூரை சேர்நத தினேஷ், கார்த்திக் ஆகியோரையும் கடலூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.இதேபோல் உயிரிழந்த மாணவியின் சொந்த ஊரான வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தில் சிலர் போராட்டம் நடத்த உள்ளதாக வந்த தகவலை அடுத்து அவரது வீட்டிற்குச் செல்லும் சாலைகளில் தடுப்பு கட்டைகள் அமைத்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டுவருகின்றனர்.
Post a Comment