'வாரிசு' விஜய் பிறந்தநாள்: சில சுவாரசிய தகவல்கள்!

 

'வாரிசு' விஜய் பிறந்தநாள்: சில சுவாரசிய தகவல்கள்!

'வாரிசு' விஜய் பிறந்தநாள்: சில சுவாரசிய தகவல்கள்!

நடிகர் விஜய் இன்று தன்னுடைய 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாள் கொண்டாட்டமாக அவர் நடித்து கொண்டிருக்கும் 'வாரிசு' படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தலைப்பு நேற்று மாலை வெளியானது. இன்றும் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் மற்றும் மூன்றாம் பார்வையை படக்குழு வெளியிட இருக்கிறது.

நடிகர் விஜய் பிறந்த நாளில் அவர் குறித்தான சில சுவாரசியமான தகவல்களை பார்க்கலாம்.

*நடிகர் விஜய்யை மருத்துவர் ஆக்க வேண்டும் என்றே முதலில் அவரது பெற்றோர் நினைத்திருந்தனர். ஆனால், விஜய் சினிமாவிற்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவரது தீவிர ஆர்வத்தையும் பிடிவாதத்தினையும் பார்த்த பெற்றோர் பின்பு சம்மதித்தனர்.

*நடிகர் விஜய் தீவிரமான ரஜினி ரசிகர். 1992-ல் வெளியான 'அண்ணாமலை' படத்தை பார்த்த பிறகே சினிமாவில் கதாநாயகனாக வேண்டும் என தீர்மானித்தாராம். அதற்கு முன்பு வரையிலுமே 'வெற்றி', 'குடும்பம்', 'சட்டம் ஒரு விளையாட்டு' என படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே படங்களில் நடித்து வந்தார்.

*'ரசிகன்' படத்தில் அவருக்கு இருந்த 'இளையதளபதி' என பெயருக்கு முன் இருந்த பட்டம் அட்லியின் 'மெர்சல்' படத்தில் இருந்து 'தளபதி' ஆனது.

*விஜய் தனக்கு பிடித்த நடிகையாக எப்போதும் ஸ்ரீதேவியை குறிப்பிடுவார். அதே போல, நடனத்தில் பிடித்தது சிம்ரன்.

*விஜய்யின் 'பூவே உனக்காக' படம் பார்த்து சங்கீதா விஜய்யின் தீவிர ரசிகரானார். ரசிகையாக விஜய்க்கு அறிமுகமாகி பின் தோழி அடுத்து பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தன் காதல் மனைவி சங்கீதாவுக்கு விஜய் முதன் முதலாக கொடுத்த பரிசு மோதிரம், பின்பு ஒரு வெள்ளி கொலுசு.

*'ரசிகன்' படத்தில் 'பாம்பே சிட்டி' பாடல் தொடங்கி 'மாஸ்டர்' படத்தின் 'குட்டி ஸ்டோரி' வரை விஜய் தன்னுடைய படங்களில் பாடிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆகும்.

*ஒவ்வொரு நடிகருக்கும் ரசிகர் மன்றங்கள் இருப்பது வழக்கம். நடிகர் விஜய்க்கும் அது உண்டு. தனது ரசிகர் மன்ற இயக்கத்தினை 2009ம் ஆண்டு மக்கள் இயக்கமாக மாற்றினார் விஜய்.

*சினிமாவில் ஜெயிக்க திறமை, அதிர்ஷ்டம், உழைப்பு இது மூன்றும் முக்கியம் என்பார் விஜய்.

*'ரசிகன்' படத்தில் விஜய்யை பாட வைக்கலாம் என இயக்குநர் எஸ்.ஏ.சி. முடிவெடுத்து இசையமைப்பாளர் தேவாவிடம் சொல்லியிருக்கார். அவரும் சம்மதிக்க 45 நிமிடங்களிலேயே தன்னுடைய முதல் பாடலை பாடி முடித்திருக்கிறார் விஜய்.

*தனது பள்ளிகாலங்களில் கிட்டார் வகுப்புகளுக்கு செல்வது, பாடுவது என இசையிலும் ஆர்வம் உடையவராக இருந்திருக்கிறார் விஜய். இறை நம்பிக்கை அதிகம் உள்ள நடிகர் விஜய் தனது பிறந்தநாளின் போது சாமி கும்பிட்டு, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial