விரைவில் ஒரு குடையின் கீழ் அதிமுக.. அரசியல் பயணத்தின் முதல் நாளிலேயே சசிகலா பரபரப்பு பேட்டி
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஓபிஎஸ் - இபிஎஸ் தனித்தனியே ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே திடீரென சசிகல, திருத்தணி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
சுற்றுப்பயணத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்று சுற்றுப்பயணத்தின் போது எல்லோரும் கருத்து கூறுகிறார்கள். அதனால் நிச்சயம் மீண்டும் அதிமுகவை ஆட்சியை கொண்டு வருவேன். எம்ஜிஆர் மறைவுக்கு பின் இதேபோன்ற சூழல் ஏற்பட்டது. அதேபோல் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது.
இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னையையும் என்னால் சரி செய்ய இயலும். எனது தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என தொண்டர்கள் நினைக்கிறார்கள். மக்களும் என்னுடன் இருக்கிறார்கள். மற்ற மாவட்டங்களிலும் எனது சுற்றுப்பயணம் தொடரும். நாடாளுமன்றத் தேர்தலுக்குள் ஒரு தலைமையின் கீழ் அதிமுக நிச்சயம் வரும் என்று தெரிவித்தார்.
Post a Comment