அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

 

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்டு  ராம்குமார் ஆதித்தன், சுரேன் கே.சி. பழனிசாமி, சண்முகம் ஆகியோர் தொடர்ந்த வழக்கில்  ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர்  தங்களையும் இணைத்துக் கொண்டார்கள். இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று  (ஜூன் 22) பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்களோடு பன்னீர், எடப்பாடி ஆகியோரின் தரப்பு வழக்கறிஞர்களும் கடுமையாக தங்களது வாதங்களை எடுத்து வைத்த நிலையில்..,  தீர்ப்பை சில மணி நேரங்களுக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி.

இந்த நிலையில் இன்று இரவு 8.45 மணியளவில் தீர்ப்பளித்தார் தீர்ப்பில், அந்தத் தீர்ப்பில்

“அதிமுக பொதுக்குழுவை நடத்தக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை.  பொதுக்குழு நடக்கட்டும். ஆனால் அதில் அஜெண்டாவில் இல்லாத தீர்மானம் எதையும் வைத்து நிறைவேற்றக் கூடாது என்றுதான் சொல்கிறார்கள்.எனவே பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தத் தடையில்லை. தீர்மானங்கள் தொடர்பான எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என்று தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி.  தீர்ப்பின் முழுமையான விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு  இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial