கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் யார்?
இந்த வருட மத்தியில் வரை கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்கள் பட்டியலை கூகுள் வெளியிட்டு இருக்கிறது.
இதில் பாலிவுட் முதல் கோலிவுட் பிரபலங்களும் அடக்கம். யார் எல்லாம் இந்த பட்டியலில் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
ஒவ்வொரு வருடமும் பிரபல தேடுதல் பொறியான கூகுள் நிறுவனம் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் ஜூன் மாதம் முடிய இருக்கும் நிலையில் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
'உலகம் முழுவதும் இருந்து இந்த வருட ஜூன் மாதம் வரை தேடப்பட்ட 100 ஆசிய பிரபலங்கள்' என்ற தலைப்பில் அந்த பட்டியலை வெளியிட்டுள்ளது கூகுள். இதில் இரண்டாம் இடத்தில் தென்கொரிய பாடகரான ஜூங்கூக் உள்ளார். மூன்றாம் இடத்தில் இந்திய பாடகரான சித்து மூசே வாலா உள்ளார்.
இவர்கள் தவிர தமிழ் சினிமா பிரபலங்களான விஜய், சூர்யா, தனுஷ் நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், ராஷ்மிகா ஆகியோரும் இடம் பெற்று இருக்கின்றனர்.
மேலும் பாலிவுட் மற்றும் டோலிவுட்டை சேர்ந்த நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான், அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு ஆகியோரும் உள்ளனர்.
இந்த பட்டியலில் மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் ஐந்தாம் இடம் பிடித்திருக்க, நடிகை காஜல் அகர்வால் இந்த பட்டியலில் 15ம் இடத்தில் இருக்கிறார்.
முதல் தமிழ் நடிகராக விஜய் 22வது இடத்திலும் சமந்தா 18வது இடத்திலும் இருக்கிறார். நயன்தாரா 33வது இடத்தை பிடித்திருக்கிறார்.
இவர்கள் தவிர கன்னட நடிகர் யஷ், தனுஷ், ஜான்வி கபூர், சச்சின் டெண்டுல்கர், ரஜினிகாந்த், பூஜா ஹெக்டே என பல இந்திய பிரபலங்கள் இடம் பிடித்துள்ளனர்.
Post a Comment