நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!
'அண்ணாமலை' படம் தான், தான் பார்த்த முதல் ரஜினி படம் என அனிருத் பகிர்ந்திருக்கிறார்.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1997-ம் ஆண்டு 'அண்ணாமலை' திரைப்படம் வெளியானது. நடிகர் ரஜினிகாந்தின் சினிமா பயணத்தில் முக்கியமானதொரு திருப்புமுனை படமாக 'அண்ணாமலை' படம் அமைந்தது. இதில் கதாநாயகியாக குஷ்பு நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி 30 வருடங்கள் கடந்தும் இன்றளவும் ரசிகர்களிடையே இந்த படத்திற்கான வரவேற்பு உள்ளது.
படம் வெளியாகி நேற்றோடு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ரஜினி ரசிகர்கள் #30YearsOfAnnamalai என்ற ஹேஷ்டேக்கினை ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட் செய்தனர். இதுமட்டுமல்லாமல் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டார். செய்தியாளர்களிடமும் இது குறித்தான மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிலையில் இசையமைப்பாளரான அனிருத் 'அண்ணாமலை' படம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
'நான் இதுவரை பார்த்த படங்களிலேயே மிகச் சிறந்தது என்றால் அது 'அண்ணாமலை' தான். நான் பார்த்த முதல் படமும் இதுதான். இப்பொழுதும் 'அண்ணாமலை' படத்தை வழக்கமாக என்னை நானே உத்வேகப் படுத்தி கொள்ள பார்ப்பேன். இந்த திரைப்படம் எனக்கு உணர்ச்சிப்பூர்வமானது. நன்றி தலைவா' என ரஜினிகாந்த், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்தையும் டேக் செய்துள்ளார்.
இந்த படத்தில் தான் ரஜினிக்கு 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்துடன் டைட்டில் கார்டு பின்னணி இசையோடு படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தேவா ரஜினிக்காக முதன் முதலில் இசையமைத்த படமும் இதுதான். அதே போல, பிரபுதேவா இந்த படத்தில் 'வந்தேன் டா பால்காரன்' பாடலுக்காக நடனம் அமைத்திருப்பார்.
ஆதிரா
Post a Comment