கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

 

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த மீனா, 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடிப்பில் வெளியான `தெறி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு, மீனா மற்றும் அவரது கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப்பின் அவர்கள் மீண்ட நிலையில், கொரோனா பக்கவிளைவுக்கு ஆளான வித்தியாசாகர், தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டு அதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்து வந்தார்.

அவருக்கு ஏற்கனவே நுரையீரல் அலர்ஜி இருந்ததாலும்,சில தினங்களுக்கு முன் திடீரென நுரையீரலில் தொற்று அதிகமானதாலும், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யதிட்டமிடப்பட்டது. எதிர்பார்த்தது போன்று உரிய காலத்தில்உறுப்புகள் கிடைக்காத நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் போனது. இதன் விளைவாக அவரது ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் ஜூன் 28 இரவு உயிரிழந்தார்.

இது திரையுலக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீனாவின் கணவர் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் அஞ்சலி செலுத்தி வந்தனர். மறைந்த வித்யாசாகரின் உடல் சென்னை சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனியில் உள்ள அவர்களது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ரஜினிகாந்த், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகர் ரகுமான், பாடகர் கிரிஷ், நடிகை குஷ்பு, நடிகர் ரமேஷ் கண்ணா, நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர் சுந்தர் சி, நாசர், சரத்குமார், டான்ஸ் மாஸ்டர் கலா, காயத்ரி ரகுராம், தமிழ்நாடு சுகாதார துறைஅமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழ்நாடு முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

பிரபுதேவா, ரம்பா குடும்பத்தார், விஜயகுமார் குடும்பத்தார், சேரன், பழம்பெரும் நடிகை லட்சுமி, சங்கீதா, கிரிஷ், பிரசன்னா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் வித்யாசாகரின் உடலுக்கு நேரில் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதையடுத்து பிற்பகல் 2 மணியளவில் வித்யாசாகரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு வைத்து தனது கணவருக்கு இறுதிச்சடங்குகளை மீனா செய்தார். பின்னர் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் கலா மாஸ்டர், நடிகைகள் ரம்பா, சங்கீதா கிரிஸ் உள்ளிட்டோர் மீனா உடன் இருந்தனர்.

நேற்று இரவு மீனாவின் கணவர் வித்யாசாகர் மரண செய்தி வெளியானபோது கொரோனா பாதிப்பு காரணமாக அவர் இறந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த நிலையில் நடிகை குஷ்பூ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய வேதனையைக் கொடுத்தது. நுரையீரல் பிரச்சனை காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். வாழ்க்கை மிகவும் குரூரமானது என்பதை இந்த இறப்பின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. மீனாவையும் அவரது மகள் நைனிகாவையும் நினைத்து என் மனசு வலிக்கிறது. வித்யாசாகர் மரண விஷயத்தில் ஊடகங்கள் சற்று பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மீனாவின் கணவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நுரையீரல் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக அவர் இறந்துள்ளார். அதனால் தயவு செய்து அவர் கொரோனாவால் இறந்ததாக யாரும் தவறான தகவலை வெளியிட்டு மக்களை அச்சுறுத்த வேண்டாம். அதோடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது அவசியம் தான். இருப்பினும் தயவு செய்து மக்களை பயமுறுத்தும் வகையில் செய்திகள் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

“மீனாவின் கணவர் 6 மாதத்துக்கு முன்பாகவே ஆக்சிஜன் உதவியுடன் தான் இருந்தார். கடந்த டிசம்பர் மாதம் முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதயம் மற்றும் நுரையீரல் செயல் இழந்துவிட்டது. 95 நாட்கள் எக்மோ தீவிர சிகிச்சையில் தான் இருந்தார். உறுப்பு மாற்றம் செய்யத் தமிழக அரசு எவ்வளவோ முயன்றது. இந்தியா முழுவதும் அவருக்கான உடல் உறுப்பு எந்த ஊரிலும் கிடைக்கவில்லை. மகாராஷ்டிரா, பெங்களூர் உள்படப் பல இடங்களில் சொல்லி வைத்திருந்தோம். ஆனாலும் அவரது ரத்த வகை பொருந்தவில்லை. தற்போது அவர் கொரோனாவால் இறக்கவில்லை” என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial