என் உடல் பிரச்சனை தான் என்னை மாற்றி இருக்கிறது: ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதி ஹாசன் தனக்கு உள்ள ஹார்மோனல் பிரச்சனைகள் பற்றியும் அதை தான் ஏற்று கொண்ட விதம் பற்றியும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை ஜிம்மில் கடினமான உடற்பயிற்சிகள் செய்யும் வீடியோவோடு வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர், 'என்னோடு இணைந்து நீங்களும் உடற்பயிற்சி செய்யுங்கள். மிக மோசமான ஹார்மோனல் பிரச்சனைகள் மற்றும் pcos-ஐ எதிர்கொண்டேன். இது போன்ற சமநிலையற்ற வளர்சிதை மாற்றங்களை எதிர்கொள்வது எந்த அளவிற்கு கடினமான ஒன்று என்பது பெண்களுக்கு நிச்சயம் தெரியும்.
ஆனால், இதனை நான் ஒரு சவாலாக பிரச்சனையாக எடுத்து கொள்ளாமல், என் உடலின் இயல்பே இது தான் என எடுத்து கொண்டேன்.
இந்த பிரச்சனையால் தான் நான் ஆரோக்கியமான உணவு, சரியான நேரத்திற்கு தூக்கம், மகிழ்ச்சியான உடற்பயிற்சி என இருக்கிறேன். என் உடல் இப்போது சரியாக இருக்கிறது. என்னுடைய மனமும் நிறைவாக இருக்கிறது.
உடலை ஆரோக்கியமாக வைத்து கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள். அதுவே உங்கள் ஹார்மோன்களை சரி செய்யும். இது எதுவோ நான் பிரச்சாரம் செய்வது போல இருக்கலாம். ஆனால், நான் மகிழ்ச்சியாக ஏற்று கொண்ட இந்த பயணம் தான் என்னை இப்படி பேச வைத்திருக்கிறது.
இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என கூறியுள்ளார்.
Post a Comment