பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: வைத்திலிங்கம்

 

பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: வைத்திலிங்கம்

பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: வைத்திலிங்கம்

பொதுக்குழுக் கூட்டம் சலசலப்போடு முடிந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் இன்று (ஜூன் 23) பிற்பகல் துணை ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

நடந்து முடிந்த பொதுக்குழுவை கடுமையாக விமர்சித்த அவர், “இன்று நடந்தது பொதுக்குழுவே அல்ல. அதிமுகவின் ஐம்பதாண்டு கால வரலாற்றில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பொதுக்குழுவை ஜனநாயகத்தோடு, கட்டுப்பாட்டோடு, அழகாக நடத்துவார்கள். ஆனால் இன்று பதவி வெறியில், அவசர புத்தியில் விபரீத எண்ணங்களோடு கட்டுப்பாடு எதுவும் இன்றி காட்டுமிராண்டித் தனமாக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இதை பார்த்த பத்திரிகையாளர்கள், நடுநிலையாளர்கள், பொதுமக்கள் உணர்ந்திருப்பார்கள். பொதுக்குழு நீதிமன்ற உத்தரவை மீறி நடந்திருக்கிறது. எனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர தயாராக உள்ளோம்” என்று கூறிய வைத்திலிங்கம் தொடர்ந்து...

“பொதுக்குழுவை கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குதான் அதிகாரம். ஆனால் அவைத் தலைவர் புதிய பொதுக்குழுவை கூட்டுகிறேன் என்கிறார். அது செல்லாது. தீர்மானங்கள் செல்லாது என்று ஆகிவிட்ட நிலையில் இந்த பொதுக்குழுவே செல்லாது. பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்து என்று சொல்லி போலியான நபர்களிடம் பணம் கொடுத்து பெற்றுள்ளனர். கூலிக்கு அழைத்துவரப்பட்டவர்களை வைத்து நடத்திய இது, பொதுக்குழு அல்ல, அரை மணி நேரத்தில் நடந்த ஓரங்க நாடகம்” என்று காட்டமாக விமர்சித்தார்.

“இவ்வளவு நடந்த பிறகும் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் சமாதனம் பேச வாய்ப்பிருக்கிறதா?” என்ற கேள்விக்கு, “இரட்டைத் தலைமை என்கிற கூட்டுத் தலைமைக்கு ஒப்புக் கொண்டால் நாங்கள் பேசத் தயார்” என்று கூறியுள்ளார் வைத்திலிங்கம்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial