ரோஜா சீரியலில் நடிப்பை தொடரும் சிபு சூர்யன்

 

ரோஜா சீரியலில் நடிப்பை தொடரும் சிபு சூர்யன்

ரோஜா சீரியலில் நடிப்பை தொடரும் சிபு சூர்யன்

'ரோஜா' சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்த சிபு சூர்யன் தற்போது மீண்டும் அதில் தொடர்வதாக அறிவித்து இருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் 'ரோஜா' சீரியலும் ஒன்று. இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்களிடையே கவனம் பெற்றதற்கு முக்கிய காரணமாக ரோஜா- அர்ஜூன் கதாப்பாத்திரங்களை சொல்லலாம். இதில் அர்ஜூன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த சிபு சூர்யன் 'ரோஜா' சீரியலில் வரும் ஆகஸ்ட் மாதம் வரை மட்டும் தான் நடிப்பேன் எனவும் அதற்கு பிறகு தயாரிப்பு நிறுவனத்தோடு கலந்தாலோசித்து, சீரியலை விட்டு விலகுவதாகவும் அறிவித்தார். மேலும் இந்த அர்ஜூன் கதாப்பாத்திரம் தனக்கு எப்போதும் ஸ்பெஷல் என்பதையும் தெரிவித்திருந்தார்.

இவர் இப்படி அறிவித்தது அவரது ரசிகர்களுக்கு வருத்தமடைய கூடிய ஒரு செய்தியாக தான் இருந்தது. அவரை சீரியலை விட்டு போக வேண்டாம் என பலரும் தெரிவித்திருந்தனர்.

இதனை அடுத்து சிபு சூர்யன் ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று 'ரோஜா' சீரியலை விட்டு விலகும் முடிவை கை விட்டு இருக்கிறார்.

இது குறித்து அவர் பகிர்ந்திருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது, 'கடந்த சில நாட்களாக ரசிகர்களிடம் இருந்து எனக்கு வரும் அன்புக்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். நிறைய குறுஞ்செய்திகள், அழைப்புகள், பதிவுகள், டேக், காமன் டிபி என நிறைய என் மேல் அன்பு காட்டினீர்கள். நிச்சயம் இதை எதிர்ப்பார்க்கவே இல்லை.

என் ரசிகர்களாகிய உங்களால் தான் நான் இங்கு இருக்கிறேன். நான் இன்று இருக்கும் நிலைக்கு நீங்கள் தான் காரணம் என்பதை என்றும் மறக்க மாட்டேன். உங்கள் அன்பினால் நான் 'ரோஜா' சீரியலை விட்டு விலகும் முடிவை மீண்டும் யோசித்து கைவிட்டு அர்ஜூனாக சீரியலில் தொடர்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

அர்ஜூன் கதாப்பாத்திரத்தில் இனி நானே தொடர்வேன் என சிபு எடுத்திருக்கும் இந்த முடிவு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial