திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர்: ஸ்டாலின்
திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர் என்று அதிமுகவைச் சூசகமாகக் குறிப்பிட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இல்ல திருமண விழா இன்று (ஜூன் 23) திருவான்மியூரில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
அவர் பேசுகையில், “இந்த மண்டபத்தில் நம்முடைய வீட்டில் நடைபெறும் திருமண விழா போன்று நாமெல்லாம் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம். இன்னொரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என அனைவருக்கும் தெரியும். அந்த பிரச்சினைக்குள் நான் போக விரும்பவில்லை. அதில் நாம் தலையிட அவசியமில்லை.
திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர். திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது. அந்த உணர்வோடு நாம் இருக்கிறோம்” என அதிமுகவில் நடைபெறும் சலசலப்புகள் பற்றி சூசகமாக பேசினார்.
இதனிடையே தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டு அதிமுக பொதுக்குழு முடிவடைந்தது.
Post a Comment