ஓபிஎஸ் வெளிநடப்பு- புதிய பொதுக்குழு தேதி அறிவிப்பு!

 

ஓபிஎஸ் வெளிநடப்பு- புதிய பொதுக்குழு தேதி அறிவிப்பு! 

ஓபிஎஸ் வெளிநடப்பு- புதிய பொதுக்குழு தேதி அறிவிப்பு! 

இன்று (ஜூன் 23) அதிமுக பொதுக்குழுவில் தற்காலிக அவைத் தலைவரான தமிழ் மகன் உசேனை நிரந்த அவைத் தலைவராக நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து தமிழ் மகன்  உசேன் பேசினார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே சி.வி. சண்முகம், கையில்  ஒரு பேப்பரோடு எடப்பாடியிடமும். கே.பி. முனுசாமியிடமும் காதோடு ஏதோ பேசினார். 

அவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகு மைக்கை பிடித்த சி.வி. சண்முகம்,   “ இன்று  (ஜூன் 23) நடைபெறும் பொதுக்குழுவில்,  2190 பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்திட்டுக் கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கையைக் கொடுக்கிறோம். 

 ‘இரட்டைத் தலைமையால் கழகத்துக்கு ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கலால் திமுக அரசை எதிர்த்து கடுமையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரட்டைத் தலைமையின் முரண்பாடான தெளிவில்லாத ஒருங்கிணைப்பில்லாத செயல்பாடுகளால் தொண்டர்களிடையே சோர்வு ஏற்பட்டுள்ளது. அம்மாவின் நூறாண்டு  காலம்  கழகம் ஆள வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற வேண்டுமென்றால் தைரியமான ஒற்றைத் தலைமை வேண்டும். எனவே இப்பொதுக்குழு இரட்டைத் தலைமையை ரத்து செய்துவிட்டு ஒற்றைத் தலைமையின் கீழ் தொண்டாற்றுவது குறித்து விவாதித்து பதிவு செய்ய வேண்டும் என்றும் அனைத்து பொதுக்குழு  உறுப்பினர்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” என்று  வாசித்து சி.வி. சண்முகம் கோரிக்கை மனுவை  கொடுத்தார்.

இதையடுத்து பேசிய அவைத் தலைவர்  தமிழ் மகன் உசேன்,  “ஒற்றைத் தலைமை குறித்து அடுத்த பொதுக்குழு கூடி விவாதிக்கும். அடுத்த பொதுக்குழு வரும் ஜூலை 11  ஆம் தேதி சிறப்பாக  நடைபெறும்” என்று அறிவித்தார்.

அதுவரை பொறுமை காத்த ஓ.பன்னீர் எழுந்தார். அவருடன் துணை ஒருங்கிணைப்பாளர்  வைத்திலிங்கம் மைக்கைப் பிடித்து, ‘இது சட்ட விரோத பொதுக்குழு’ என்று முழக்கமிட்டு விட்டு ஓபிஎஸ் சுடன் வெளியேறினார்.  இதனால் பொதுக்குழு சலசலப்போடு முடிந்தது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial