படமாகும் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு!

 

படமாகும் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு!

படமாகும் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு!

இந்திய நாட்டின் பிரதமராக மூன்று முறை இருந்த மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாயியின் வாழ்க்கையை மையமாகக்கொண்ட பயோபிக் திரைப்படம் உருவாக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பை, படத்தை இணைந்து தயாரிக்க உள்ள வினோத் பானுஷாலி மற்றும் சந்தீப் சிங் வெளியிட்டுள்ளனர். ‘அடல்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் 2023 கிறிஸ்துமஸ் நாளன்று வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் வாஜ்பாயின் 99ஆவது பிறந்த நாள், அதை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதில் அவரது பால்ய காலம், கல்லூரி நாட்கள் மற்றும் அரசியல் பிரவேசம் குறித்து விவரிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்திய அரசில் பாஜகவின் முதல் பிரதமராக பதவி வகித்தவர் வாஜ்பாய்.

1924, டிசம்பர் 25ஆம் தேதி அன்று பிறந்த அவர், மத்தியப் பிரதேசத்தின் குவாலியரைச் சேர்ந்தவர். முதுகலைப் பட்டம் முடித்தவர். தான் சார்ந்த கட்சியின் கொள்கையை தீவிரமாகப் பின்பற்றி வந்தவர். பாஜகவின் முதல் தலைவர். மூன்று முறை பிரதமராகச் செயலாற்றியவர். பொக்ரான் - II அணுகுண்டு சோதனை மற்றும் கார்கில் யுத்தம் இவரது ஆட்சிக்காலத்தில் நடந்தது. 2002இல் முன்னாள் குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் தேர்வு செய்யப்பட்டதும் இவரது பதவி காலத்தில்தான். பாரத ரத்னா விருதைப் பெற்றவர். 2018 ஆகஸ்ட் 16 அன்று அவர் காலமானார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial