கிச்சன் கீர்த்தனா: சேமியா இட்லி

 

கிச்சன் கீர்த்தனா: சேமியா இட்லி

கிச்சன் கீர்த்தனா: சேமியா இட்லி

குழந்தைகள் முதல் வேலைக்குச் செல்பவர்கள் வரை பலரும் செய்யும் தவறு, காலை உணவைத் தவிர்ப்பது. காலை உணவே அந்நாள் முழுவதுக்குமான சக்தியைக் கொடுக்கும் என்பதால், சத்தான காலை உணவு அவசியம். அதற்காக நாலு இட்லி, இரண்டு வடை, ஐந்து தோசை என்று தேவையில்லை. குறைந்த அளவு, நிறைந்த சத்து கொண்ட இந்த சேமியா இட்லி செய்து சாப்பிட்டு இந்த நாளை ஆரோக்கியமான நாளாக்கலாம்.

என்ன தேவை?

சேமியா - ஒரு கப்

தயிர் - ஒரு கப்

துருவிய கேரட் - அரை கப்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன்

தோல் சீவி, பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்

நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

சமையல் சோடா - 2 சிட்டிகை

கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு, எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு

உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு தாளித்து தனியாக எடுத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் நெய் ஊற்றி சேமியாவைச் சிவக்க வறுத்துக்கொள்ளவும். இதனுடன் தயிர் மற்றும் உப்பு, சமையல் சோடா சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு இதனுடன் துருவிய கேரட், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். பின்னர் தாளித்து தனியாகவைத்துள்ள பொருள்களையும் இதனுடன் சேர்த்து, இட்லி மாவைவிடச் சற்று கெட்டியான பதத்துக்கு மாவைக் கலந்துகொள்ளவும். பிறகு மாவை இட்லிகளாக வார்த்தெடுக்கவும். தேங்காய்ச் சட்னி, அல்லது தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial