ஆஸ்கர் அகாடெமியில் உறுப்பினராகும் சூர்யா, கஜோல்
ஆஸ்கர் அமைப்பில் இந்த ஆண்டு உறுப்பினர்களாக சேர நடிகர் சூர்யா, நடிகை கஜோலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஆஸ்கார் அகாடெமி , அந்த அமைப்பில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு அழைப்பு விடுக்கும். அந்த வகையில் இந்த வருடம் நடிகர் சூர்யா மற்றும் நடிகை கஜோலுக்கு அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நிறுவனத்தில் சேர அழைப்பு வந்துள்ளது.
இதுமட்டுமல்லாமல், புகழ் பெற்ற 397 கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அவர்களின் திறமை, தொழில் ரீதியிலான அர்ப்பணிப்பு, தகுதி ஆகியவை அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு உறுப்பினர்கள் பட்டியலில் ஆஸ்கர் விருது வென்ற 15 பேர் மற்றும் ஆஸ்கர் பரிந்துரைக்கு சென்ற 71 பேர் பட்டியலில் உள்ளார்கள்.
சூர்யாவுக்கு ஆஸ்கர் விடுத்துள்ள இந்த அழைப்பு அவரது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. 'Pride Of Indian Cinema' என சமூக வலைதளங்களில் சூர்யாவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த 2021-ல் அவரது அவரது 'சூரரைப் போற்று' திரைப்படமும், சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்காக தகுதி பட்டியலில் 'ஜெய்பீம்' திரைப்படமும் ஆஸ்கர் விருதுகள் பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த வருடம் சூர்யா 'விக்ரம்' படத்தில் நடித்த 'ரோலக்ஸ்' கதாப்பாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படி அடுத்தடுத்து சூர்யாவுக்கு வெற்றிகள் குவிந்து வருவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாலிவுட் நடிகை கஜோலும் ஆஸ்கர் குழுவில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்கர் அழைப்பு விடுத்துள்ள இந்த புதிய பட்டியலில் 44% பெண்கள், 37% நான் வொயிட்ஸ் மற்றும் 50% பேர் அமெரிக்கர்கள் இல்லாதோர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment