கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

 

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

நடிகர் கார்த்தியின் 'சர்தார்' படத்தில் நடிக்கிறேனா என்பதற்கு பிக் பாஸ் புகழ் ராஜு ஜெயமோகன் விளக்கம் கொடுத்துள்ளார்.

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து வரக்கூடிய திரைப்படம் 'சர்தார்'. கார்த்திக்கிற்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.

இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பு முடிந்து ஜூலை முதல் வாரத்தில் இருந்து படம் குறித்தான அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாக உள்ளது. இந்த படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் விக்கிப்பீடியா பக்கத்தில் பிக் பாஸ் ஐந்தாவது சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட நடிகர் ராஜூ ஜெயமோகன் நடிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை ரசிகர் ஒருவர் ஸ்கிரீன்ஷாட் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ராஜுவை டேக் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு தான் ராஜூ தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

விக்கிப்பீடியா பக்கத்தில் காட்டப்பட்டுள்ளது போல 'சர்தார்' படத்தில் நடிகர் கார்த்தியுடன் மித்ரன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமும். ஆனால், விக்கிப்பீடியாவில் குறிப்பிடப்பட்டது போல இது உண்மை இல்லை. வரும் காலத்தில் அவர்களுடன் சேர்ந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கிறேன்' என இயக்குநர் மித்ரனை டேக் செய்து படத்தின் மாபெரும் வெற்றிக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ராஜூ.

ராஜூ ஜெயமோகன் சின்னத்திரை நடிகராக அறியப்பட்டவர். பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பிக் பாஸ் சீசன் முடிந்த பிறகு, சிவகார்த்திகேயனின் 'டான்' திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது சின்ன திரையில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை பிரியங்காவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial