அஜித் படம் வெற்றி பெற உதவிய இயக்குனர் பாக்யராஜ் – வெளிவந்த பல வருட ரகசியம்.!
தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரமாக மாறி உள்ளவர் நடிகர் அஜித்குமார். இப்பொழுது கூட பல்வேறு இயக்குனர்களுடன் இணைந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார் சினிமாவையும் தாண்டி தனது குடும்பத்தை பார்த்துக் கொள்வது.
அதேசமயம் மறைமுகமாக பல நலத்திட்ட உதவி மற்றும் தன்னை நம்பி உதவி என கேட்கும் நபருக்கும் மறைமுகமாக உதவிகளை செய்து அசத்துகிறார். இதனால் சினிமாவையும் தாண்டி ரசிகர்கள் அஜித்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர். அஜித் எப்படியோ அதே போல அஜித்துக்கு தெரியாமல் அஜித் படத்திற்கு ஸ்கிரிப்டை எழுதி உதவி செய்துள்ளார்.
பாக்கியராஜ் நடிகர் பாக்கியராஜ் சினிமா உலகில் கால்பதித்து 50 வருடங்கள் முடிவடைந்து தற்போது பேட்டி ஒன்றில் அஜித் படம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். நடிகர் அஜித்குமார் 1992 ஆம் ஆண்டு பிரேம புஸ்தகம் என்ற திரைப்படத்தில் நடித்து தன்னை ஹீரோவாக கைப்பற்றிக் கொண்டார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்தாலும் பாதியில் படத்தின் இயக்குனர் இறந்துவிட இயக்குனரின் அப்பா பாக்யராஜின் நெருங்கிய நண்பராக அப்போது இருந்ததால் பிரேம புஸ்தகம் படத்தின் ஸ்கிரிப்டை பாக்யராஜிடம் கொடுத்து இதற்குமேல் கதை எப்படி போகும் என தெரியவில்லை என கூறி கொடுத்துள்ளார்.
இயக்குனர் பாக்யராஜ் உடனே பிரேம புஸ்தகம் படத்தின் முழு ஸ்கிரிப்டையும் படித்துவிட்டு மீதி ஸ்கிரிப்ட்டில் படத்தை முடிக்க பாக்கியராஜ் உதவி செய்துள்ளார். பின் படம் வெளிவந்து சூப்பராக ஓடியது இந்த விஷயம் அஜித்துக்கு தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை. இன்று மக்கள் கொண்டாடும் ஹீரோவாக அஜித் இருக்கிறார். அவர் முதல் படத்திற்கு என்னால் முடிந்த சில உதவிகளை செய்தேன் எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது என கூறினார்.
Post a Comment