அமெரிக்காவில் அசத்தும் நெப்போலியன்

 






அமெரிக்காவில் அசத்தும் நெப்போலியன்







1990களில் தமிழ் சினிமாவில் பிரபலமாக வில்லன்களில் ஒருவர் நடிகர் நெப்போலியன். இவர் மிகவும் உயரமான நடிகர்.

இவர் ‘எஜமான்’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார். இவர்களின் வானவராயன் வல்லவராயன் என்ற கேரக்டர்கள் பெரிய அளவில் பேசப்பட்டது.

மேலும் பல படங்களில் வில்லனாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் நடித்து வந்தார்.

‘சீவலப்பேரி பாண்டி’ படத்தில் ஹீரோவாக நடித்து தமிழக ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

‘எட்டுப்பட்டி ராசா’ படத்தில் ‘பஞ்சு மிட்டாய் சேலை கட்டி…’ என்ற பாடல் பிரபலமானது இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக குஷ்பூ, ஊர்வசி நடித்திருந்தனர்.

பின்னர் சில ஆண்டுகள் சினிமா விட்டு விலகி தீவிர அரசியலில் ஆர்வம் காட்டினார். மத்திய அரசில் இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் நெப்போலியன்.

சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘போக்கிரி’ படத்தில் விஜயுடன் நடித்திருந்தார். ‘சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து இருந்தார்.

அவ்வப்போது தமிழ் சினிமாவில் தலைகாட்டி கொண்டிருந்தாலும் இவர் செட்டில் ஆனது அமெரிக்காவில்

அமெரிக்காவில் உள்ள டென்னசே மாகாணத்தில் உள்ள நேஷ்வில்லே நகரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தான் வசிக்கும் பகுதியிலும் விவசாயம் செய்து வருவதாக நெப்போலியன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial