பாஜகவுக்கு செல்லூர் ராஜூ மீண்டும் எச்சரிக்கை!

 

பாஜகவுக்கு செல்லூர் ராஜூ மீண்டும் எச்சரிக்கை!

பாஜகவுக்கு செல்லூர் ராஜூ மீண்டும் எச்சரிக்கை!

மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ இன்று (ஜூன் 26) தனது தொகுதியில் இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசும்போது அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து வருத்தம் தெரிவித்தார்.

“காசுக்காக வேஷம் போடுகிறவர்களை, பதவிக்காக வேஷம் போடுகிறவர்களை நான் கேட்கவில்லை. எம்.ஜி.ஆரின் தொண்டர்கள், ரசிகர்களை நான் கேட்கிறேன். அதிமுக என்ற இந்த இயக்கம் காப்பாற்றப்பட வேண்டும். வேறு எந்த கட்சியிலும் ஜனநாயகம் கிடையாது. இன்றைக்கு ஆசிரியர் வீரமணி கூட அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவரது நல்லெண்ணத்துக்கு எனது வாழ்த்துகள்.

இப்போது அதிமுகவில் நடப்பது ஒர் உட்கட்சிப் பிரச்சினை. ஆனால் இதை ஊடகங்கள் ஊதிப் பெருக்கி விவாதம் வைக்கிறீர்கள். அதுதான் வருத்தமாக இருக்கிறது. திமுகவில் ஒரு சாதாரண அடிப்படை உறுப்பினர் முதல்வராக முடியுமா? ஆட்சி என்பது அதிகாரம் செலுத்துவதற்கு அல்ல, சேவை செய்வதற்கு என்று எம்.ஜி.ஆர் சொன்னார். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் உணர்ச்சிவசப்படாமல் அமைதி காக்க வேண்டும். ஜாதியை சொல்லி மதத்தைச் சொல்லி யார் என்ன சொன்னாலும் உணர்ச்சிவசப்படாதீர்கள்.

ஒரு நாயரை தலைவராக ஏற்றுக் கொண்ட கட்சி அதிமுக. ஒரு பிராமண பெண்ணை தலைவராக ஏற்றது அதிமுக. சாதாரண ஓபிஎஸ்., ஈபிஎஸ்சை முதல்வராக்கியது அதிமுக. மீண்டும் அதிமுக புத்தெழுச்சியோடு வரும். அதிமுகவை பிரித்து தங்களிடம் சேர்த்துக் கொள்ளலாம் என்று மாநில கட்சிகளோ தேசிய கட்சிகளோ முயற்சித்தாலும் நடக்காது. ஆசைக்கு சில பேர் போகலாம். ஆனால் தொண்டர்கள் யாரும் அதிமுகவை விட்டு போகமாட்டார்கள்” என்றார் செல்லூர் ராஜூ.

கடந்த ஜூன் 4 ஆம் தேதி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, அதிமுகவை பாஜக தலைவர் விமர்சிப்பதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், பாஜகவுக்கு கூட்டம் கூடுவது பற்றிய கேள்விக்கு, ‘அதிமுகவுக்குக் கூடுவது கொள்கைக் கூட்டம். மற்றதெல்லாம் காக்கா கூட்டம். இரை தீர்ந்ததும் பறந்துவிடும்’ என்று கூறினார்.

இது சர்ச்சையான நிலையில்... இப்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை பாஜக பயன்படுத்திக் கொள்ளும் என்று யூகங்கள் வருகிற சூழலில்தான், அதிமுகவை பிரித்து அதன் மூலம் மாநில கட்சிகளோ தேசிய கட்சிகளோ பலனடைய முடியாது என்று பாஜகவை பெயர் குறிப்பிடாமல் மீண்டும் விமர்சித்துள்ளார்.

மேலும் தனது செய்தியாளர் சந்திப்பில் பெரும்பாலான நேரம் எம்.ஜி.ஆர். பற்றிய தகவல்களைச் சொல்லி, ‘வரலாறு தெரியாதவர்களுக்காக இதைச் சொல்கிறேன்’ என்று பின் குறிப்பும் கொடுத்தார் செல்லூர் ராஜூ.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial