சிங்கம் 4 படம் எப்போது?: ஹரி
சினிமாவில் நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா என பலமான பின்புலம் இருந்தும் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய அருண் விஜய்க்கு வெற்றி என்பது வசப்படாமல் நழுவி சென்று கொண்டிருந்தது
2015ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்த 'என்னை அறிந்தால்' என்ற படத்தில் வில்லனாக நடித்தார் அருண் விஜய். அவர் நடித்த விக்டர் என்ற அந்த கேரக்டர் அவருக்கு சினிமாவில் நல்லதொரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து தொடர்ந்து வெற்றிகரமான நாயகனாக நடித்து வரும் அருண் விஜய், தற்போது ஹரி இயக்கியுள்ள யானை என்ற படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தின் டீசர் கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
தற்போது ரிலீஸுக்கு தயாராகி விட்ட இந்தப் படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக இயக்குநர் ஹரியும், நடிகர் அருண் விஜய்யும் மாவட்டம் தோறும் சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் கடலூரில் நடைபெற்ற யானை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அருண் விஜய், "இந்த யானை படத்திற்காக என்னால் முடிந்த அனைத்து உழைப்பையும் கொடுத்திருக்கிறேன். படமும் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. அதனால் என்னுடைய வெற்றிப் பட வரிசையில் இந்தப் படமும் இடம்பிடிக்கும். அதோடு என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த பிறகு கதாநாயகனாகவே நடித்து வருகிறேன். அதேசமயம் மீண்டும் நல்ல கதைகள் கிடைத்தால் வில்லனாக நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார் அருண் விஜய்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஹரி பேசும்போது, தமிழகம் முழுவதும் இந்த யானை படத்துக்காக மாவட்டம்தோறும் சென்று புரமோஷன் செய்து வருகிறோம். கமலின் விக்ரம் படம் வெற்றி பெற்றிருப்பது தமிழ் சினிமாவுக்கான வெற்றி என்றும், நல்ல கதையைத் தேர்வு செய்து விட்டு சிங்கம் படத்தின் நான்காம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சியில் இறங்குவேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
Post a Comment