யாழ் நெடுந்தீவில் 300 பேருக்கு உணவுப் பொதிகள் வழங்கல்!
நெடுந்தீவு பகுதியில் உள்ள ஆறு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் பொருண்மியம் நலிவடைந்த 300 பேருக்கு நேற்று உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் திரு.விசுவாசம் செல்வராசா அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயற்பாட்டில் பூமணி அம்மா அறக்கட்டளையின் நிர்வாக செயலாளர் ந. விந்தன் கனகரட்ணம், தீவக சிவில் சமூக பொருளாளர் கருணாகரன்
குணாளன், சமூக சேவையாளர் முத்துக்குமாரசுவாமி அகிலன், பூமணி அம்மா அறக்கட்டளையின் பொருளாளர் எஸ்.கீர்த்தனா, அறக்கட்டளையின் நிர்வாகசபை உறுப்பினர்களான எஸ்.கார்த்திகா,விதுஷா, நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவரும் இலங்கை செஞ்சிலுவை சங்க யாழ் மாவட்ட பொருளாளருமான எ.அருந்தவசீலன்,சமூக செயற்பாட்டாளர்களான வி.ருத்திரன்,தவம் , ஜேசுதாசன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்
Post a Comment