விக்ரம் 3, கைதி 2 கதை ரெடி.. ஒன் லைன் ஸ்டோரியை வெளியிட்ட லோகேஷ்

 

விக்ரம் 3, கைதி 2, உள்ளிட்ட திரைப்படத்தை இயக்கப்போகும் லோகேஷ் கனகராஜ் தற்போது இந்த இரண்டு படங்களின் ஒன் லைன் ஸ்டோரியை பகிர்ந்துள்ளார். 




கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.இத்திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், விக்ரம் திரைப்படத்தில் இயக்கி தொடர் வெற்றியை கொடுத்து வருகிறார். இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி, பாஹத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்த நிலையில், இப்படத்தில் கைதி திரைப்படத்தின் கதையை இணைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இதனிடையே கைதி 2 திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் 3 திரைப்படம் உருவாக உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் கைதி,விக்ரம் திரைப்படத்தின் தொடர் கதையாகவே இயக்கப்படும் என்பது பலரும் அறிந்ததே. தற்போது இப்படங்களின் ஒன் லைன் ஸ்டோரியை பகிர்ந்துள்ள லோகேஷ் கனகராஜ், கைதி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலிருந்து,கார்த்தி கட்டைப்பையை ஒரு கையிலும், மற்றொரு கையில் குழந்தையையும் தூக்கி செல்வார்.அங்கிருந்து கைதி 2 திரைப்படத்தின் கதை ஆரம்பிக்கப்படவுள்ளது, அந்த கட்டப்பையில் ஜெயிலில் கார்த்தி கபடி விளையாடி வெற்றிப் பெற்ற கோப்பையை எடுத்து செல்வார். மேலும் கதைப்படி தன் மகளை வளர்த்து வரும் கார்த்தி,கைதி முதல் பாகத்தில் இடம்பெற்ற ஆடலரசு வில்லன் கும்பல்களிடம் சண்டைப் போட்டு சமாளித்து கமலஹாசனுடன் கார்த்தி சேர்ந்து, விக்ரம் 3 திரைப்படத்தின் தொடக்கம் வருவது போல கைதி 2 முடியுமாம்.

அதைத்தொடர்ந்து விக்ரம் 3 திரைப்படம் ஆரம்பமாகும், இத்திரைப்படத்தில் பகத் பாசில், கமல், கார்த்தி உள்ளிட்டோர் இணைந்து,விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டிய சூர்யாவை, கார்த்தியை வைத்து கமலஹாசன் பழிவாங்குவார் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் கைதி 2, விக்ரம் 3 படத்தின் எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி 67 திரைப்படத்தை தளபதி விஜய் நடிப்பில் கூடிய விரைவில் இயக்க உள்ளார். இத்திரைப்படத்தை தொடர்ந்து கைதி 2 திரைப்படம் நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial