நமது AKSWISSTAMILMEIDA வலைதளம் மூலமாக பல சிறப்புக் கட்டுரைகளை தொடர்ந்து கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு தமிழ் சினிமாவில் 100வது படத்தை கடந்த நடிகர்கள் நடித்த படங்கள். லிஸ்டை பார்க்கலாம் வாங்க!
சத்யராஜ் – வாத்தியார் வீட்டு பிள்ளை: 6.2 உயரம் கொண்ட சத்யராஜ், தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார். அவரது நக்கல் கொண்ட நடிப்பு மிகவும் பிரபலம். கவுண்டமணி, மணிவண்ணன் ஆகியோருடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டிக்கு அளவே கிடையாது. சத்தியராஜ் 80களின் பிற்பாதியிலும், 90களிலும் மிக பிரபலமாக இருந்தார். ஆரம்பத்தில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக உயர்ந்தார். சத்தியராஜ் நடித்த இந்த 100வது படத்தை பி.வாசு இயக்கி இருந்தார். காமெடிக்கு கவுண்டமணி. ஆன பின்பும் படம் தோல்வியை தழுவியது.
கார்த்திக் – உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்: நவரச நாயகன் கார்த்திக் அவர்களுக்கு ரசிகைகள் அதிகம். 90களில் மிகவும் உச்சத்தில் இருந்தார். அவ்வபோது சர்ச்சைகளில் சிக்கினாலும் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார். ஆக்சன், காதல், நகைச்சுவை என்று எந்த விதமான கதைக்கும் பொருந்துபவர் கார்த்திக். கார்த்திக்கின் 100வது படம், இயக்குனர் விக்ரமன் இயக்கிய உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். ரோஜா கதாநாயகி, அஜித்குமார் இந்த திரைப்படத்தில் நட்புக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பார். 200 நாட்கள் ஓடி சாதனை படைத்தது இந்த படம். எஸ் ஏ ராஜ்குமார் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட். இந்த படத்தில் இருந்துதான் ‘ லா லா லா ‘ பிஜிஎம் மிகவும் பிரபலமானது.
விஜயகாந்த் – கேப்டன் பிராகரன்: விஜயகாந்த் அவர்கள் நடித்த இந்த நூறாவது படத்திற்கு பின்னர் அவர் பெரும்பாலும் கேப்டன் என்று அழைக்கப்பட்டார். இந்த படத்தில் வீரபத்திரன் ஆக மன்சூரலிகான் சிறப்பாக நடித்திருந்தார். மேலும் ரம்யாகிருஷ்ணன், ரூபிணி, லிவிங்ஸ்டன் உட்பட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் அதன் இறுதி காட்சிக்காக மிகவும் பேசப்பட்டது. வீரபத்திரனை கொன்றதுடன் அவனுடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள் சிலரை கொலை செய்து அதன் நியாயத்தை கோர்ட்டில் வெளியிடும் கதாபாத்திரத்தில் விஜயகாந்த் சிறப்பாக நடித்திருந்தார்.
இந்த லிஸ்டில் இருக்கும் மற்றும் நடிகர்கள் அனைவரின் படமும் மிக சுமாரான வெற்றியோ அல்லது தோல்வியோ சந்தித்தது. ஆனால் இதில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே மாபெரும் வெற்றியை பதிவு செய்தார். கேப்டன் பிரபாகரன் திரைப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி சில்வர் ஜூப்ளி கொண்டாடியது என்பது சிறப்பான வெற்றி.
Post a Comment