லாபம் தருமா வெந்து தணிந்தது காடு’!
கௌதம்மேனன் – ஏ.ஆர்.ரகுமான் – சிலம்பரசன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’.
விண்ணைத் தாண்டி வருவாயா, ‘அச்சம் என்பது மடமையாடா’ ஆகிய படங்களுக்குப் பிறகு உருவாகியிருக்கும் இந்தக் கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்தி இதானி நாயகியாக நடித்திருக்கிறார்
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மாநாடு படத்தின் வெற்றி வெந்து தணிந்தது காடு படத்தின் விலை அதிகரிக்க காரணமாகி இருக்கிறது.
இப்படத்தின் இந்தி உரிமை பனிரெண்டு கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது. வலைதளத்தில் வெளியிடும் உரிமை 20 கோடிக்கும், தொலைக்காட்சி உரிமை 12 கோடி வரை விலை கேட்கப்பட்டும் தயாரிப்பாளர் தரப்பில் ஒப்புதல் தராமல் கூடுதலாக எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது.
மூன்று உரிமை வியாபாரங்களிலேயே சுமார் 48 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது. 28 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ள படம் வெந்து தணிந்தது காடு வெளியீடு, விளம்பரம், முதலீட்டு வட்டி என கூடுதலாக 10 கோடி ஆக மொத்தம் 38 கோடி என்கின்றனர் சினிமா வியாபாரிகள்.
ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெளியான படங்களில் அதிக லாபம் தந்த படம் LKG அதனை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு திரைப்படம் முதலீட்டை போன்று இரு மடங்கு வருவாயை பெற்று தரும் என்கின்றனர்
-வாணன்
Post a Comment