தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வேலணையில் நினைவேந்தல்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளையின் ஏற்பாட்டில் வேலணை பிரதேச சபைக்கு முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் இன்று
காலை 11 மணியளவில்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது .
மாவீரர்களின் பெற்றோரினால் ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நினைவேந்தல் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் , வேலணை பிரதேச சபை உறுப்பினர்களான கருணாகரன் நாவலன் , பிலிப் பிரான்சிஸ் , அ. மேரி மற்றில்டா , சு . பிரகலாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்
Post a Comment