என்னுடைய முதல் படம் வாலி.. எனக்கு வாழ்க்கை கொடுத்த படம் இதுதான் பெருமையாக சொன்ன எஸ் ஜே சூர்யா
ஆரம்பத்தில் விஜய் நடுவில் தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்துள்ளார். அப்போது அவருக்கு கம்பேக் கொடுத்து மற்ற மொழிகளுக்கு விஜய்யை கொண்டு சேர்த்த படம் என்றால் அது குஷி தான் என இப்படத்தின் இயக்குனர் எஸ் ஜே சூர்யா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய ஆரம்ப படம் வாலியாக இருந்தாலும் குஷி படம் தனக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்ததாக கூறி உள்ளார். இந்நிலையில் இன்றுடன் குஷி படம் வெளியாகி 22 வருடங்கள் ஆகிறது. அந்த ஆண்டு வெளியான படங்களிலேயே குஷி படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது
மேலும் குஷி படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் இப்படத்தை பற்றி பல சுவாரசியமான எஸ் ஜே சூர்யா பகிர்ந்து கொண்டார். இயக்குனராக அறிமுகமாகி ஹீரோவாக நடித்து வந்த எஸ் ஜே சூர்யாவுக்கு தற்போது வில்லன் கதாபாத்திரம் தான் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.
மேலும் விஜய்யின் இயக்குனராக இருந்த எஸ் ஜே சூர்யா அவருக்கு வில்லனாக மெர்சல் படத்தில் மிரட்டி இருந்தார். இதைத்தொடர்ந்து சிம்புவின் மாநாடு படத்திலேயும் தனது வில்லத்தனத்தை காட்டியிருந்தார் எஸ் ஜே சூர்யா. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்
சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு தூணாக அமைந்தது. இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் எஸ் ஜே சூர்யா குஷி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதிலும் ஆர்வம் உள்ளதாக அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
Post a Comment