யாழ்.நெடுந்தீவில் நிவாரணப் பணி!
நெடுந்தீவு பகுதியில் ஆறு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் உள்ள வறிய நிலை 62 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலர் உணவு பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் தீவகம்,சரவணையை சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில் அறக்கட்டளையின் செயலாளர் செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம், தீவக சிவில் சமூக பொருளாளர் கருணாகரன் குணாளன், சமுக சேவையாளர் ப.சூடாமணி, நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவரும் இலங்கை செஞ்சிலுவை சங்க யாழ் மாவட்ட பொருளாளருமான எ.அருந்தவசீலன், நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபை குருவானவர் பி.எஸ்.றொக்சன்,சமூக சேவையாளர் வி.ருத்திரன் ஆகியோரின் பங்கேற்பில் குறித்த பகுதியில் உள்ள மக்களுக்கு இன்று உலர் உணவு நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன
Post a Comment