பாலா -சூர்யா படம் கைவிடப்பட்டதா?
இந்த வருடத்தில் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா41.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நாகர்கோவில் பகுதியில் நடைபெற்றது. படப்பிடிப்பில் பாலா - சூர்யா இருவருக்குமிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் சூர்யா படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்த நிலையில் வதந்திகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக நடிகர் சூர்யா இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக தன் சமூக வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கதை சொல்வதில் தனக்கென தனி பாணியை உருவாக்கி கொண்டவர் இயக்குநர் பாலா. இவர் இயக்கத்தில் வெளியான சேதுபட வெற்றிக்கு பின்னர் சூர்யா நடித்த நந்தா படத்தை இயக்கினார். அதன் பின் சூர்யா-விக்ரம் நடித்தபிதாமகன் படத்தை இயக்கினார். 19 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா நாயகனாக நடிக்கும் படத்தை பாலா இயக்கி வருகிறார்.
இதுவரை நடித்திராத தோற்றத்தில் சூர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக தெலுங்கு படங்களில் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா.
இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநர் மாயப்பாண்டி. எடிட்டர் சதீஷ் சூர்யா. இந்தப் படத்தை 2டி என்டர்டெயின்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.
Post a Comment