தியேட்டர் பாணியில் ஓடிடி!

 

தியேட்டர் பாணியில் ஓடிடி!

தியேட்டர் பாணியில் ஓடிடி!

இந்திய சினிமாவில் ஒரு படம் 100 நாளை கடந்து திரையரங்குகளில் ஓடுவது தற்போது கானல் நீராகி போனது. 100 நாட்களில் படங்களைப் பார்க்கும் பார்வையாளனை முதல் வார முடிவுக்குள் தியேட்டருக்கு வரவைக்கும் முயற்சிகளில் திரைப்படத் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் ஈடுப்பட்டனர். அதனால் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 130 திரைகளில் வெளியிடப்பட்ட புதிய திரைப்படங்கள் குறைந்தபட்சம் 250, அதிகபட்சம் 800 திரைகள் வரை திரையிட தொடங்கியதால் புதிய படங்கள் திரைகளில் ஓடும் ஆயுள்காலம் குறைந்தது.

முன்னணி நடிகர்களின் படங்களைப் பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கையிலும் மாற்றமில்லை. திருட்டு விசிடியில் புதிய படங்களை பார்த்து வந்தவர்களுக்கு ஓடிடியில் நேரடியாக புதிய படங்கள் வெளியிட தொடங்கியபின் படம் பார்க்கும் பழக்கத்தில் மக்களிடம் மாற்றம் ஏற்பட தொடங்கியது.

கொரோனா பொது முடக்கத்துக்குப் பின் திரையரங்குகளில் படம் பார்க்க வரும் எண்ணிக்கையிலும் மாற்றங்கள் இல்லை என்பதே கள நிலவரமாக உள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் சமூக வலைதளங்களில் செய்திகளை வெளியிடும் வேகம் அதிகரித்து வருகிறது.

ஒரு நிறுவனம் படம் தயாரிக்க போவதை அறிவிக்க இருக்கும் நிகழ்வை தெரிவிக்கும் அறிவிப்பு, படத்தின் தலைப்பை எப்போது அறிவிக்க போகிறோம் என்பதற்கான அறிவிப்பு, தலைப்பு அறிவிப்பு, அதை வெளியிடப் போவது யார் என்கிற அறிவிப்பு, கதாநாயகன் யார் என்கிற அறிவிப்பு, கதாநாயகி அறிவிப்பு என சமூக வலைதளங்களை தங்கள் படம் சம்பந்தமான புரமோஷனுக்கு தயாரிப்பாளர்கள் பயன்படுத்தினாலும் அதனால் அந்தப் படத்துக்கு குறைந்தபட்ச பலன்கள் கூட இல்லை என்பதே உண்மை.

பைனான்சியர்களிடம் கடன் வாங்கவும், நடிகர் நடிகைகளை திருப்திபடுத்த மட்டுமே இது போன்ற போலித்தனமான பிம்பங்கள் பயன்படுகின்றன. மக்களை வசீகரிக்கும் படங்கள் இயல்பாகவே இங்கு வெற்றி பெறுகின்றன. நன்றாக இருந்தும் சில படங்கள் தோல்வியைத் தழுவ காரணம், அந்தப் படங்களின் வெளியீட்டு தேதி, வெளியிடும் முறை, புரமோஷன் நடவடிக்கைகள் பலவீனமாக இருந்தால் படம் தோல்வியடைகிறது. தற்போது புதிய பழக்கம் தமிழ் சினிமாவில் அரும்ப தொடங்கியிருக்கிறது.

ஓடிடி தளம் என்பது படங்களை ஒரிடத்தில் குவித்துவைக்கும் வலைதளம், தேவைப்படுபவர்கள் சந்தாதாரர் ஆகி விரும்பிய படங்களை பார்க்கலாம். ஆனால் இங்கேயும் படங்கள் வெளியாகி 50 நாட்கள், 100 நாட்கள், 150, 200, என போஸ்டரை வெளியிட்டு கொண்டாட்ட மனநிலையை ஓடிடி நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.

200 நாள் என 'ஜெய் பீம்' படத்திற்கு தயாரிப்பு நிறுவனம் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. ஓடிடியில் கடந்த 2021 நவம்பர் 2ஆம் தேதி வெளியான படம் இது. சூர்யா, லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடித்திருந்தனர். படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பும், விமர்சகர்களிடம் பெரும் பாராட்டும் கிடைத்தது.

அதேசமயம் கடும் சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் சந்தித்தது. அதன் காரணமாக தற்போது சில வழக்குகளை அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான ஜோதிகா, சூர்யா, மற்றும் இயக்குநர் எதிர்கொள்ள உள்ளனர். ஓடிடியில் வெளியான ஒரு படத்துக்கு 200 நாள் போஸ்டரா என்பது ஆச்சரியம்தான்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial