மாமன்னன் படப்பிடிப்பில் பகத் பாசில்

 

மாமன்னன் படப்பிடிப்பில் பகத் பாசில்

'மாமன்னன்' படப்பிடிப்பில் பகத் பாசில்

மாரி செல்வராஜ் இயக்கி வரும் 'மாமன்னன்' படப்பிடிப்பில் நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளார்.

நடிகர் தனுஷுடன் 'கர்ணன்' பட வெற்றிக்கு பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். படத்திற்கு 'மாமன்னன்' என தலைப்பிடப்பட்டு இதன் முதல் பார்வை சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

இதன் படப்பிடிப்பு தற்போது சேலத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' படங்களை போலவே வலுவான கதை களம் கொண்ட படமாக 'மாமன்னன்' இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் பெரும்பாலான பகுதி இரவில் படமாக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதில் நடிகர் பகத் பாசில் தற்போது இணைந்துள்ளார்.

நடிகர் வடிவேலுவுக்கு இன்னும் சில தினங்களில் அவரது படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் மீண்டும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் கலந்துகொள்வார்.

'மாமன்னன்' படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று நடிகர் பகத் இணைந்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் பகத் பாசில் தெலுங்கில் 'புஷ்பா' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். அடுத்த மாதம் வெளியாக இருக்கும் கமலின் 'விக்ரம்' திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது 'மாமன்னன்' படத்திலும் அவரது கதாபாத்திரம் பேசப்படும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial