புதிய அமைச்சரவைக்கு பரிந்துரை இல்லை- ஜனாதிபதியின் கடிதத்திற்கு சஜித் பதில்


 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல நிபந்தனைகளின் கீழ் பிரதமரை நியமிப்பது தொடர்பில் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றிரவு பதிலளித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் தனது முடிவை கடைசி நேரத்தில் மட்டுமே அறிவித்தார் என்ற ஜனாதிபதியின் கூற்றை சஜித் பிரேமதாச தனது கடிதத்தில் நிராகரித்துள்ளார்.

இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் பலமுறை சந்தித்து நிபந்தனைகள் குறித்து விவாதித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியதோடு, குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு உட்பட்டு ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே அந்த பதவியை பொறுப்பேற்க இணங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் நினைவுபடுத்தினார்.

மக்களின் ஆணையைப் புறக்கணித்து நேரடியாக அமைக்கப்படவுள்ள அமைச்சரவைக்கு ஐக்கிய மக்கள் சக்தி எந்தப் பரிந்துரையையும் செய்யாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு அறிவிதுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial