தொடரும் அச்சநிலை - அதிகரிக்கப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு!
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக உப காவல் பரிசோதகர் ஒருவர் உட்பட 6 அதிகாரிகளை நியமிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவு இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக குறித்த நியமனங்களை நியமிக்குமாறு காவல் அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை தீவைத்து வருகின்றன நிலையில் அவர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Post a Comment