*ஒன்றியத்தின் தப்பாலே ஒண்ணுமே இல்ல...' - வைரலாகும் கமல் பாடல்*
நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் நடிப்பில் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள படம் 'விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வரும் 15-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் 'விக்ரம்' படத்தின் கமல்ஹாசன் எழுதிப் பாடியுள்ள 'பத்தல பத்தல' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலில் கமல்ஹாசன் சென்னை பாஷையில் பாடியுள்ளார். தன் குழுவில் உள்ள நண்பர்களை பற்றி விவரிக்கும் விதமாக வெளிவந்துள்ள இப்பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Post a Comment