அருண் மாதேஸ்வரன் -தனுஷ் கூட்டணி உறுதி

 கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்திவருகிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் ‘வாத்தி’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர்  (23.12.2021) அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது இதனை தனுஷ் உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,” ஆம்,யூகங்கள் உண்மைதான் அருண் மாதேஸ்வரன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கும் அதிர்ஷ்டசாலி நடிகர் நான்தான். விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பு வெளியாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தற்போது செல்வராகவன் நடிக்கும் ‘சாணிக்காயிதம்’ படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் பணிகள் முடிந்தவுடன் தனுஷ் நடிக்கும் படத்தில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial